Newsடிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

டிக் டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் போட்டி

-

டிக்டொக் செயலியை வாங்க அமெரிக்க நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டொக் செயலி மூலமாக அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களை சீன நிறுவனம் களவாடி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்பதற்கு ட்ரம்ப் அனுமதி வழங்கியிருந்தார். இதற்காக டிக்டொக்குக்கு 75 நாட்கள் கால அவகாசமும் அளித்திருந்தார். இதையடுத்து, ஆரக்கிள், வோல்மார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில் டிக்டொக் விவகாரம் குறித்து ட்ரம்ப் கூறியதாவது,

டிக்டொக்கை வாங்க நான்கு குழுமங்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், பல நிறுவனங்களும் டிக்டொக்கை வாங்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இறுதி முடிவை தான் ஆலோசித்து எடுக்கப்போவதாகவும், சீன தரப்பும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையிருப்பதாகவும் கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...