Newsஆஸ்திரேலியாவில் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடிய சிறுவர்கள்

ஆஸ்திரேலியாவில் பாம்பை ஸ்கிப்பிங் கயிறாக்கி விளையாடிய சிறுவர்கள்

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள வூராபிண்டா என்ற இடத்தில் சிறுவர்கள் சிலர் ஒரு இறந்த பாம்பை ஸ்கிப்பிங் கயிறாகப் பயன்படுத்தி விளையாடுவதைக் காட்டும் ஒரு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

இந்தச் சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் அந்நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறை குறித்த செயற்பாட்டை கண்டித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருப்புத் தலை பைத்தான் என்பது அவுஸ்திரேலியாவில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும், இது விஷமற்றது மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பாம்பை காயப்படுத்துவது அல்லது கொல்வது சட்டவிரோதமானது.

மேலும் இதற்காக அதிகபட்சமாக 12,615 அவுஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவர்கள் விளையாடிய பாம்பு முன்னரே இறந்திருந்ததா அல்லது அவர்களால் கொல்லப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பபமாகியுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...