கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது.
தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், கோயில் வளாகத்தில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது
அதேவேளை அங்கோர்வாட் கோயில் வளாகத்தில் கடந்த 1927ஆம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியை ‘ஸ்கேன்’ செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் குறித்த பகுதியானது பொருந்துகிறது.
அந்த சிலை, 12 அல்லது 13ஆவது நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.