Sportsபோதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர்

-

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சிக்கியுள்ளார்.

1998 ஆம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானவர் ஸ்டூவர்ட் மெக்கில்.

சுழற்பந்து வீச்சாளரான இவர், அவுஸ்திரேலியா அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 208 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு சர்வேதச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஸ்டூவர்ட் மெக்கில்.

கடந்த 2021 ஆம் ஆண்டு, 3,30,000 அமெரிக்க டொலர் மதிப்பு 1 கிலோ அளவிலான கொக்கைன் எனும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புள்ளதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு சிட்னி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “சிட்னியின் வடக்கு கடற்கரையில் உள்ள தனது உணவகத்தில் வைத்து, வழக்கமாக போதைப் பொருள் வழங்கும் நபரை தனது உறவினரான Marino Sotiropoulos என்பவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதன் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டதாகவும் மெக்கில் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனக்கு இதில் தொடர்பில்லை என இந்த குற்றச்சாட்டை மெக்கில் மறுத்துள்ளார். 

மெக்கிலின் ஈடுபாடு இல்லாமல் இந்த கடத்தல் நடைபெற்றிருக்க முடியாது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு ஈடுபாடு உள்ளதால் அதற்கேற்ற அளவிலான தண்டனையை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அவருக்கான தண்டனை அறிவிப்பை 8 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...