ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த வார இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என்று ஊகிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட குற்றவாளியை சிறையில் தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்தக் குற்றவாளி, தனது 13 வயதில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மூன்று வயது சிறுமி கோர்ட்னி மோர்லி-கிளார்க்கைக் கடத்திச் சென்று குத்திக் கொன்றான்.
கொலையைச் செய்த சிறுவன் அதே நாளில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறார் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவரது தண்டனை 2021 இல் முடிவடையும் என்று கூறப்பட்டது.
இருப்பினும், தடுப்புக்காவல் உத்தரவுகளின் அடிப்படையில் அவர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இந்த குற்றவாளியை மேலும் தடுத்து வைக்குமாறு சட்டமா அதிபர் மார்க் அய்ரெஸ் சமர்ப்பித்த விண்ணப்பம் நேற்று (14) நிராகரிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.