மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் வீடுகளுக்கு அருகில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
நிலவும் வறண்ட காற்று மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக தீ பரவல் அதிகரித்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மாண்ட்ரோஸில் உள்ள தீ விபத்துப் பகுதியிலிருந்து 50 முதல் 100 மீட்டர் தொலைவில் வீடுகள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மெல்பேர்ண் அதிகாரிகள், மாண்ட்ரோஸ் மற்றும் கில்சித் குடியிருப்பாளர்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் இதுவரை சுமார் 2 ஹெக்டேர் பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
மெல்போர்னில் நாளை வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகக் குறையும் என்றும், மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை சேவை கூறுகிறது.