உலகின் மிகவும் வாழத் தகுதியான நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் மற்றும் சிட்னி ஆகியவை அடங்கும்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட இந்த தரவரிசையில் மெல்பேர்ண் நான்காவது இடத்தில் உள்ளது.
மேலும் சிட்னி ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வாழக்கூடிய நகரமாக ஆஸ்திரியாவின் வியன்னா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டென்மார்க்கின் கோபன்ஹேகன் மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்தன.
மேலும், நகரங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை கனடாவின் கால்கரி மற்றும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரங்கள் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.