கொசுக்களால் பரவும் கொடிய வைரஸான ஜப்பானிய மூளைக்காய்ச்சல், பிரிஸ்பேர்ணில் முதல் முறையாகப் பரவியுள்ளது.
ஆல்ஃபிரட் சூறாவளி முடிந்த சில நாட்களுக்குப் பிறகு இந்த ஆபத்துநிலை அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள பல அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அபாயத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரிஸ்பேர்ணில் இந்த கொடிய வைரஸ் அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறையாகும்.
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களிலும் இதே போன்ற தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நோயின் அறிகுறிகளில் தலைவலி மற்றும் உடல் வலிகள் என்பன அடங்கும்.