அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 200க்கும் மேற்பட்டோரை டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது.
நாடு கடத்தப்பட்டவர்கள் வெனிசுலா கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அமெரிக்க மாவட்ட நீதிபதி James. E Boasberg இந்த நாடுகடத்தல் செயல்முறையைத் தடுக்க ஒரு உத்தரவையும் பிறப்பித்திருந்தார்.
இருப்பினும், அதற்குள் இந்த சட்டவிரோத குடியேறிகளை ஏற்றிச் சென்ற இரண்டு விமானங்கள் எல் சால்வடார் மற்றும் ஹோண்டுராஸுக்குப் புறப்பட்டுச் சென்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களில் வெனிசுலா கும்பலான “Tren de Aragua”வைச் சேர்ந்த 238 பேரும், MS-13 கும்பலைச் சேர்ந்த 23 பேரும் அடங்குவதாக எல் சால்வடார் அதிபர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.