ட்விட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டுவந்த ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் பக்கத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதனிடையே ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்ட ட்விட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினையை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இலச்சினை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 254 கிலோ ஆகும் . இந்த ஏலமானது மார்ச் 20ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இலச்சினை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.