அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இடையே இன்று காலை தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.
ரஷ்ய ஜனாதிபதி உடனடியாக முழுமையான போர்நிறுத்தத்தை எட்ட மறுத்துவிட்டார்.
இருப்பினும், உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை 30 நாட்களுக்கு நிறுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த போர் நீண்டகால அமைதியுடன் முடிவடைய வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக வெள்ளை மாளிகை அறிக்கை மேலும் கூறியது.
இந்த நடவடிக்கை தொடர்பாக உக்ரைனுடன் விவாதங்கள் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், ரஷ்யாவும் உக்ரைனும் வரும் புதன்கிழமை 175 போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள உள்ளன.
படுகாயமடைந்த 23 வீரர்களை ரஷ்யா உக்ரைனுக்கு திருப்பி அனுப்பும் என்றும் புதினும் டிரம்பும் சந்திப்பின் போது தெரிவித்தனர்.