ஹோண்டுராஸின் கரீபியன் கடற்கரையில் பறந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோண்டுரான் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விமானத்தில் இருந்த ஐந்து பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
ஜெட்ஸ்ட்ரீம் 32 ரக விமானம், ரோட்டன் தீவில் உள்ள ஜுவான் மானுவல் கால்வேஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளானது.
விமான விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.