விக்டோரியா மாநிலத்தில் ஆளும் தொழிலாளர் கட்சி மீது எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி தொடர்ச்சியான ஊழல் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
கடந்த 19ம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் 4,700 பேரின் கையொப்பங்களுடன் ஒரு மனுவையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தற்போதைய ஜெசிந்தா ஆலன் அரசாங்கம் முற்றிலும் சுதந்திரமான புலனாய்வுக் குழுவை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், விக்டோரியாவில் உள்ள நூலகங்களுக்கு வழங்கப்படும் தொடர் புத்தகங்கள் பாலின வேறுபாடுகளை சிதைப்பதாக குடிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆளும் தொழிலாளர் கட்சி அரசாங்கம் இந்தப் புத்தகத் தொடரின் மூலம் தவறான தகவல்களைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.