சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பதவிக்கு முதல் முறையாக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
41 வயதான கிறிஸ்டி கோவென்ட்ரி, ஜிம்பாப்வேயின் தற்போதைய விளையாட்டு அமைச்சராகவும், அந்நாட்டின் முன்னாள் நீச்சல் சாம்பியனாகவும் உள்ளார்.
அதன்படி, அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 10வது தலைவர் மற்றும் அந்தப் பதவியை வகிக்கும் முதல் ஆப்பிரிக்கர் ஆவார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைய நபரும் கிறிஸ்டி கோவென்ட்ரி ஆவார்.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தேர்தல்கள் 20ம் திகதி கிரேக்கத்தில் நடைபெற்றன.
முதல் சுற்றில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அவர் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் அடுத்த ஜூன் மாதம் தனது பதவியின் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்க உள்ளார்.