2025 ஆம் ஆண்டில் பயணம் செய்ய உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தத் தகவல் Berkshire Hathaway Travel வெளியிட்ட குறியீட்டின்படி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது. கனடா மூன்றாவது இடத்திலும், அயர்லாந்து நான்காவது இடத்திலும், சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
நியூசிலாந்து ஆறாவது இடத்திலும், ஜெர்மனி ஏழாவது இடத்திலும், நோர்வே எட்டாவது இடத்திலும், ஜப்பான் ஒன்பதாவது இடத்திலும், டென்மார்க் பத்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.