NewsSamsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

Samsung நிறுவனத்தின் இணை தலைமை அதிகாரி காலமானார்

-

Samsung எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரியான ஹான் ஜாங் ஹீ மாரடைப்பு காரணமாக 63 வயதில் உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சம்சுங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் Samsung நிறுவனத்தின் நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் மொபைல் சாதனங்கள் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் 1988 ஆம் ஆண்டு சம்சுங் எலக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தில் இணைந்த ஹான், தொலைக்காட்சி வியாபாரத்தில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். சுமார் 19 வருடங்களாக உலகின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான Samsung-இன் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

தொடர்ந்து அவர், DX பிரிவை வழிநடத்தி, சம்சுங்கின் தொலைக்காட்சி, வீட்டு உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் போன் வணிகங்களையும் மேற்பார்வை செய்தார்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...