விக்டோரியாவை ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார்.
வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
விக்டோரியாவில் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் “விக்டோரியாவின் எதிர்காலத்தை உருவாக்குதல்” என்று அழைக்கப்படுகிறது.
இதில் 2 பில்லியன் டாலர் செலவில் மாநிலத்தின் ஒரு பெரிய போக்குவரத்துத் திட்டமான விக்டோரியன் புறநகர் ரயில் வளையத் திட்டத்தை செயல்படுத்துவதும் அடங்கும்.
இதற்கிடையில், ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியன் மாநில அரசாங்கங்களுடன் இணைந்து ஒரு பொதுப் பள்ளித் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்திலும் கவனம் செலுத்தியுள்ளது.