உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாட்டிலும் குற்றங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்பட்டதாக Numbeo ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது.
குற்றச் செயல்கள் குறியீட்டில் முதல் 5 இடங்களில் வெனிசுலா, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை உள்ளன.
அந்த குறியீட்டின்படி, ஆஸ்திரேலியா 67வது இடத்திலும், இலங்கை 89வது இடத்திலும் தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்டோரா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், தைவான் மற்றும் ஓமன் ஆகியவை உலகின் ஐந்து பாதுகாப்பான நாடுகளில் அடங்கும்.
பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 59வது இடத்திலும், ஆஸ்திரேலியா 82வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.