மே மாதம் 3ம் திகதி தேர்தல் நடைபெறும் என பிரதமர் அந்தோணி அல்பானீஸ் செய்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் இன்று காலை கான்பெராவில் உள்ள கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டினின் இல்லத்திற்குச் சென்று ஊடகங்களுக்கு வெளியிடுவார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் ஏப்ரல் 12 ஆம் திகதி கூட்டாட்சித் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த மாத தொடக்கத்தில் ஆல்ஃபிரட் சூறாவளியானது குயின்ஸ்லாந்தை கடுமையாக தாக்கியதால், கூட்டாட்சித் தேர்தலை ஏப்ரலில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே மாற்று திகதியாக மே 3ம் திகதி கூட்டாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.