ஆஸ்திரேலியாவிற்கு தகுதியான பொறியாளர்கள் தேவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
Engineers Australia-வின் செயல் தலைமைப் பொறியாளர் Bernadette Foley, நாட்டில் பல திறமையான புலம்பெயர்ந்த பொறியாளர்கள் இருப்பதாகக் கூறினார்.
ஆனால் அவர்களில் பலர் ஆஸ்திரேலியாவில் வேலை தேடுவதற்கு தேவையற்ற தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவில் தகுதிவாய்ந்த பொறியாளர்களில் சுமார் 16% பேரும், பொறியியல் பட்டதாரிகளில் 19% பேரும் பெண்கள் என்று செயல் தலைமைப் பொறியாளர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவின் எதிர்காலத்திற்காக பொறியியல் துறையில் சேர அதிகமான மக்களை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று Engineers Australia-வின் தலைமை நிர்வாக அதிகாரி பொறியாளர் Romilly Madew AO கூறினார்.