விக்டோரியாவில் நடந்த அவலோன் சர்வதேச விமான கண்காட்சியின் போது ஒரு விமான விபத்து ஏற்பட்டுள்ளது.
நான்கு விமானங்கள் சம்பவ இடத்திற்கு மேலே பறந்ததைக் கண்டதாகவும், அவற்றில் ஒன்று தரையிறங்கியதாகவும் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் குறித்த விமானத்தை ஓட்டிய விமானியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அதிகாரிகள் விமானக் கண்காட்சியை சில மணி நேரம் நிறுத்தி வைக்க முடிவு செய்தனர்.
அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இந்தக் கண்காட்சி, தெற்கு அரைக்கோளத்தில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச விமானக் கண்காட்சி மற்றும் விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியாகும்.