மே 3 ஆம் திகதி நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் வாக்காளர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
18 வயதை எட்டிய ஆஸ்திரேலிய குடிமக்கள் ஏப்ரல் 4 ஆம் திகதி இரவு 8:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
தேர்தல் நாளிலோ அல்லது அதற்கு முன்பாகவோ பதிவு செய்து வாக்களிக்காத எவருக்கும் $20 அபராதம் விதிக்கப்படும்.
முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22 ஆம் திகதி தொடங்குகிறது.
ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், முன்கூட்டியே வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 30 ஆம் திகதி மாலை 6:00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தேர்தலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் 48வது நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும்.