அடிலெய்டு மருத்துவமனையில் செவிலியராக உடையணிந்து பணிபுரிந்த ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நபர் ஜூன் 2023 இல் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தற்போது 26 வயதான சந்தேக நபருக்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் தாக்குதல் மற்றும் மற்றவர்களை அவமதிக்கும் நடத்தை ஆகியவையும் அடங்கும்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அடிலெய்டு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
அதன்படி, அடுத்த விசாரணையில் அவருக்கு தண்டனை வழங்கப்படும்.