மேற்கு குயின்ஸ்லாந்தின் பல பகுதிகள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்ளூர்வாசிகள் விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சி நிறுவனங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரிஸ்பேர்ணில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.
இதற்கிடையில், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மேலும் மழை பெய்யும் அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து வருகிறது.
இதன் விளைவாக, மாநிலத்தில் உள்ள பல ஆறுகளுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.