வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து வார காலம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததே என்று கூறப்படுகிறது.
மார்ச் 29ம் திகதி குயின்ஸ்லாந்து மாநிலத்தை மையமாகக் கொண்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது, இரு தலைவர்களும் போராட்டக்காரர்களால் இடையூறு செய்யப்பட்டனர்.
இதன் விளைவாக இரண்டு அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இரு தலைவர்களும் நேற்று (30) இரண்டாவது நாள் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான கூட்டாட்சித் தேர்தல் மே 3 ஆம் திகதி நடைபெறும்.