Cricket Australia வரவிருக்கும் சீசனுக்கான போட்டி அட்டவணையை அறிவித்துள்ளது.
அதன்படி, 11 நகரங்களை உள்ளடக்கிய 14 மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்.
அதன்படி, தென்னாப்பிரிக்க, இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளன.
தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 T20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்தியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 T20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 19 ஆம் திகதி தொடங்குகிறது.
இந்திய மகளிர் அணி பெப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 3 T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு பகல்-இரவு டெஸ்ட் போட்டி ஆகியவை அடங்கும்.