உயர்கல்விக்கான உலகின் சிறந்த நகரங்களில் இரண்டு ஆஸ்திரேலிய நகரங்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
QS உலக பல்கலைக்கழக தரவரிசையின்படி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தரவரிசையில் மெல்பேர்ண் நான்காவது இடத்திலும், சிட்னி ஏழாவது இடத்திலும் உள்ளன.
இந்தக் குறியீட்டின்படி, பிரிட்டனின் தலைநகரான லண்டன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜப்பானின் டோக்கியோ இரண்டாவது இடத்தையும், தென் கொரியாவின் சியோல் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
ஜெர்மனியின் மியூனிக் நகரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 6வது இடத்தையும், ஜெர்மனியின் பெர்லின் மற்றும் சுவிட்சர்லாந்தின் சூரிச் ஆகியவை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த குறியீட்டின்படி, அமெரிக்காவின் பாஸ்டன் நகரம் பத்தாவது இடத்தில் உள்ளது.