ஆஸ்திரேலியா முழுவதும் அதிபர்கள் ராஜினாமா செய்யும் போக்கு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அச்சுறுத்தல்கள் – தாக்குதல்கள் மற்றும் சைபர்புல்லிங் ஆகியவையே இதற்கு முக்கிய காரணிகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 53.2 சதவீத அதிபர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளனர்.
குறிப்பாக அதிக வேலைப்பளுவுக்கு மத்தியில், தங்கள் கடமைகளைச் செய்யும்போது பெற்றோரிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதே அவர்களின் நிலைப்பாடாகும்.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான அதிபர்கள் ராஜினாமா செய்தால், ஆஸ்திரேலியாவின் முழு கல்வி முறையும் கடுமையான சரிவை சந்திக்கும் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.