இளம் குழந்தைகள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கொண்ட ஆன்லைன் வீடியோ கேம்களை உருவாக்கிய விக்டோரியன் நபருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியன் நீதிமன்றத்தில், 32 வயதான அந்த நபர் வேண்டுமென்றே இந்தச் செயலைச் செய்திருப்பது தெரியவந்தது.
வீடியோ கேம் விளையாடுபவர்கள் குழந்தை துஷ்பிரயோக காட்சிகளைக் கொண்ட கேம்களை விளையாட விருப்பமின்மையை வெளிப்படுத்தினால், அவர்கள்தான் தோல்வியடையும் வகையில் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆன்லைன் விளையாட்டை மில்லியன் கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் ஈட்டிய வருமானம் ஒரு மில்லியன் டாலர்களைத் தாண்டியதாகவும் கூறப்படுகிறது.
அவர் செய்த செயலின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, 8 ஆண்டுகள் கடந்த பின்னரே அவர் ஜாமீனுக்கு விண்ணப்பிக்க முடியும்.