ஆஸ்திரேலிய எல்லையில் சட்டவிரோத போலி தடுப்பூசி பேனாக்கள் ஒரு தொகை அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்படி, Ozempic தயாரிப்புகளின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க ஆஸ்திரேலியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தயாரிப்புக்கள் போலியான தயாரிப்புகளாகத் தோன்றுகின்றன. மேலும் பேக்கேஜிங்கில் எழுத்துப் பிழைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள், பேனாக்களில் உள்ள தொகுதி எண்களில் ஒற்றுமைகள் இருப்பதால், MPSD916 தொகுதி எண்ணைக் கொண்ட Ozempic 1mg பேனாக்களை வாங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.
இது கடுமையான உடல்நல ஆபத்தை ஏற்படுத்துவதால், இதைப் பயன்படுத்த வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் மக்களை மேலும் வலியுறுத்தினர்.
ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் மேலும் இந்த வகையான பேனாக்களை வைத்திருப்பவர்கள், அவற்றைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காக தங்கள் உள்ளூர் மருந்தகத்திற்குக் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
Ozempic என்பது Type 2 நீரிழிவு மற்றும் நீண்டகால உடல் பருமனுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஊசி மருந்து ஆகும்.