சிட்னியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து, சிட்னி தொடக்கப் பள்ளியில் ஒன்று மற்றும் இரண்டு வகுப்புகளில் பயிலும் அனைத்து சிறுவர்களும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் சிட்னியின் வடமேற்கில் உள்ள ஒரு பொதுப் பள்ளியில் நடந்ததாகப் புகாரளிக்கப்பட்டது.
கடந்த மார்ச் 7 ஆம் திகதி, ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுவர்கள் குழு ஒன்று குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் சிறுமியின் தாயார் அவளை பள்ளியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த விசாரணை தற்போது கல்வித் துறையின் குழந்தை பராமரிப்பு அலுவலகத்தின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தால், இடைவேளையின் போது சிறுவர் சிறுமிகள் விளையாட்டு மைதானத்திற்குள் நுழையும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக பள்ளி முதல்வர் கூறுகிறார்.