Newsகஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

கஜகஸ்தானில் அரியவகை தாதுக்கள் கண்டுபிடிப்பு

-

மத்திய ஆசியாவில் உள்ள நாடுகளிலொன்றான கஜகஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில் இந்த அரிய வகை தாது படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதை அந்நாட்டின் தொழில் மற்றும் கட்டுமான அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் சுமார் ஒரு மில்லியன் தொன் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த தாதுக்கள் முக்கியமாகத் தேவைப்படுகிறது.

குய்ரெக்டிகோல் மட்டுமின்றி பெரிய ஜானா கஜகஸ்தான் என்ற பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300 மீட்டர் ஆழத்தில் 20 மில்லியன் தொன்களுக்கும் அதிகமான அரிய உலோகங்களின் படிவங்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்த அரிய உலோகங்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு இன்றியமையாதவையாக உள்ளன. இதன் தேவை சர்வதச அளவில் அதிகரித்து வருகிறது. தற்போது சீனா மட்டுமே இதில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக கஜகஸ்தானின் இந்த கண்டுபிடிப்பு இருக்கிறது.

அதேநேரம் கஜகஸ்தானிடம் இந்த அரிய உலோகங்களை வெட்டி எடுக்கத் தேவையான தொழில்நுட்பம் இல்லை. மேலும், பிரித்தெடுத்தல் உள்ளிட்ட இதர பணிகளுக்கான உட்கட்டமைப்பும் இல்லை. இதனால் கஜகஸ்தான் அரசு வெளிநாட்டு முதலீட்டைக் கோரி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest news

Online-இல் வெளியிடப்பட்ட வீடியோவால் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பல்

விக்டோரியாவில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று கூறப்படும் ஒரு குழு, தங்கள் குறும்புத்தனங்களை ஆன்லைனில் வெளியிட்ட பின்னர், ரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குழு, லைக்குகள் மற்றும்...

ட்ரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலிய உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதுவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான...

சீனாவின் ஆடம்பர செலவினத்தால் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய வேலைகள் ஆபத்தில்

சீனா தனது தடுமாறும் பொருளாதாரத்திற்கு மானியம் வழங்க பில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுவதால், ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய உற்பத்தி வேலைகள் ஆபத்தில் உள்ளன என்று புதிய ஆராய்ச்சி...

செயலியில் குழந்தைகளின் ஆபாசத்தைப் பகிர்ந்த WA நபர்

பாலியல் ரீதியாக வெளிப்படையான புகைப்படங்கள் மற்றும் குழந்தைகளின் வீடியோவை விநியோகித்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளி ஒருவர், தனது தண்டனை காலத்தால் பின்தங்கியதால், கடுமையான...

இன்றும் தொடரும் காணாமல் போன விமானத்தை தேடும் பணி

Bass Straitயில் காணாமல் போன இலகுரக விமானத்தைத் தேடும் பணி இன்று மீண்டும் தொடங்கியது. கடந்த சனிக்கிழமை டாஸ்மேனியாவில் உள்ள George Town விமான நிலையத்திலிருந்து இரண்டு...

AFP தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி

வரலாற்றில் முதல்முறையாக, ஆஸ்திரேலியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரியான மத்திய காவல்துறையின் தலைமை ஆணையராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். AFP தேசிய பாதுகாப்பு துணை ஆணையர் Krissy Barrett...