சிட்னிக்கு பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர வெளியேறும் வழியைத் திறக்க முயன்ற நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குறித்த விமானம் கடந்த 5ம் திகதி மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னியை வந்தடைந்தது.
46 வயதான சந்தேக நபர் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விமானப் பயணத்தின் போது விமானத்தின் அவசர வெளியேறும் கதவைத் திறக்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அதைத் தடுக்க விமானக் குழுவினர் விரைவாகச் செயல்பட்டனர்.
இருப்பினும், சந்தேக நபர் விமானக் குழு உறுப்பினரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபர் நேற்று (06) Parramatta மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
மேலும், இதுபோன்ற குற்றத்திற்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.