மக்கள் வரிக்காத பல ஆஸ்திரேலிய தீவுகள் மீது டொனால்ட் டிரம்ப் அதிக வரிகளை விதித்துள்ளமை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
பென்குயின்கள் மற்றும் சீல்கள் மட்டுமே வசிக்கும், கட்டிடங்களோ அல்லது மக்களோ இல்லாத McDonald மற்றும் Heard தீவுகளுக்கும் டிரம்ப் வரி விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
2,200 மக்கள் தொகை கொண்ட சுற்றுலா தலமான Norfolk தீவின் மீதும் டிரம்ப் 29 சதவீத வரியை விதித்துள்ளார். குறித்த தீவிலிருந்து அமெரிக்காவிற்கு எந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதே!
இது ஆஸ்திரேலியா மீது விதிக்கப்பட்ட கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிகம் என்று தீவு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Cocos மற்றும் கிறிஸ்துமஸ் தீவுகள் மீதும் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார்.
இருப்பினும், இந்த தீவுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள், பூமியில் யாரும் அமெரிக்காவிடமிருந்து பாதுகாப்பாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார்.