மகளிர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஆஷ்லீ கார்ட்னர் தனது தோழியை மணந்தார்.
அவுஸ்திரேலியாவின் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான ஆஷ்லீ கார்ட்னர், நீண்டகாலமாக மோனிகா ரைட் என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர்கள் திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்து, மோதிரத்தை பெருமையுடன் காட்சிப்படுத்தினர்.
இவர்கள் இருவரும் தற்போது திருமணம் செய்துகொண்டு தம்பதியாகியுள்ளனர். இந்த திருமண விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, சக வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.