சிட்னி வருடாந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் – Parramatta, Dr Andrew Charlton MP அவர்கள் சிட்னி முருகன் கோவிலுக்கு புதிய சமுதாயக் கூடம் ஒன்றை நிறுவுவதற்கு 7 மில்லியன் டாலர்களை வழங்குவதாக கூறியுள்ளார்.
இன்று தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த போதே இந்த நற்செய்தியை மக்களுக்கு தெரிவித்தார்.
வருகிந்ற மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தன் கட்சியான Labor கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக Dr Andrew Charlton MP அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த புதிய மண்டபம் திருவிழாக்கள், மொழி வகுப்புகள், கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் பலவற்றிற்கான இல்லமாக இருக்கும். இது இணைப்பு, கற்றல் மற்றும் சமூகப் பெருமைக்கான இடமாகும். ஆஸ்திரேலியாவில் மிகவும் துடிப்பான சமூகங்களில் ஒன்றை ஆதரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.
