ஆஸ்திரேலியாவின் முன்னணி IVF மருத்துவமனையில் நடந்த ஒரு பெரிய தவறுக்குப் பிறகு, ஒரு பெண் தெரியாமல் மற்றொரு தம்பதியினரின் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இது மோனாஷ் IVF இன் பிரிஸ்பேர்ண் மருத்துவமனையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
நிறுவனம் மனிதத் தவறு என்று விவரித்ததன் காரணமாக தவறான கரு தற்செயலாக மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பெப்ரவரியில் பிறந்த ஒரு குழந்தையின் பெற்றோர், மீதமுள்ள உறைந்த கருக்களை வேறொரு வழங்குநருக்கு மாற்றுமாறு கோரியபோது இது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் செயல்பாட்டின் போது, மோனாஷ் IVF கிடங்கில் கூடுதல் கரு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு உள் விசாரணையைத் தூண்டியது.
மற்றொரு நோயாளியிடமிருந்து பெறப்பட்ட கரு தற்செயலாக உருகி குறித்த பெற்றோருக்கு மாற்றப்பட்டதால், உயிரியல் ரீதியாக அவர்களுடையது அல்லாத ஒரு குழந்தை பிறந்தது விசாரணையில் தெரியவந்தது.
தவறு நடந்த போதிலும், அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டதாக மருத்துவமனை வலியுறுத்துகிறது.
மோனாஷ் IVF தலைமை நிர்வாக அதிகாரி மைக்கேல் நாப் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட இரு குடும்பங்களுக்கும் மருத்துவமனை ஆதரவளிக்கும் என்றார்.