உலகளாவிய வர்த்தகத்தை அதிகரிக்க ஆஸ்திரேலியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராகி வருகிறது.
சீன இறக்குமதிகள் மீதான வரிகளை டிரம்ப் 125% ஆக உயர்த்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கம் இரவோடு இரவாக ஆஸ்திரேலியாவுடன் கைகோர்க்க முன்வந்ததாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதர் சியாவோ கியான், உலகளாவிய சுதந்திர வர்த்தகத்தைப் பாதுகாக்க பெய்ஜிங்கும் கான்பெராவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு கூட்டாக பதிலளிக்க ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச சமூகத்துடன் கைகோர்க்க சீனா தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.
இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நேற்று 3 மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டன.