ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதனால் நாட்டில் கடுமையான வானிலை நிலவும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அரபுரா கடலில் உருவாகியுள்ள வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கிறது.
இது வார இறுதியில் தென்மேற்கே திமோர் கடலில் நகர்ந்து பின்னர் மேற்கு ஆஸ்திரேலியாவின் வடக்கே நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை மாலைக்குள் மேற்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் ஒரு சூறாவளி உருவாக 60% வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.