கடந்த மாதம், அமெரிக்க முட்டை விலைகள் மீண்டும் ஒரு டசனுக்கு US$6.23 (A$10) என்ற புதிய சாதனை அளவை எட்டின.
மொத்த விலைகள் குறைந்து, பறவைக் காய்ச்சல் பரவிய போதிலும் முட்டை விலைகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 20 ஆம் திகதி வரும் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்குப் பிறகு முட்டைகளுக்கான தேவை பொதுவாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மார்ச் மாத நடுப்பகுதி வரை மொத்த விலைகள் குறையத் தொடங்காததால், மாதத்திற்கு சராசரி விலைகள் குறைய போதுமான நேரம் இருந்திருக்காது என்று ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பொருளாதார நிபுணர் ஜடா தாம்சன் கூறுகிறார்.
அதன்படி, ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமைக்குள் அமெரிக்க முட்டை விலைகள் சாதனை அளவை எட்டக்கூடும் என்று தெரியவந்துள்ளது. இது மலிவான முட்டைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தகர்த்தெறிகிறது.