ஆஸ்திரேலிய மருத்துவர்கள் குழு ஒன்று பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளில் மேலும் மேம்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பார்கின்சன் நோய்க்கு தற்போது பயன்படுத்தப்படும் dopamine மருந்து அறிகுறிகளைப் போக்க உதவினாலும், அது நோயின் வளர்ச்சியைத் தடுக்காது என்று டாக்டர் Derrick Beech கூறுகிறார்.
அதை மாற்றுவதே இந்தப் புதிய பரிசோதனையின் நோக்கம் என்று ஆஸ்திரேலிய மருத்துவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், பல மருந்துகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக Macquarie பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Simon Lewis தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என்று பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.