ஆஸ்திரேலியாவில் தனது சகோதரியின் நினைவுச் சடங்கில் கலந்து கொண்டு அமெரிக்கா திரும்பும் போது ஜோனதன் என்ற ஆஸ்திரேலியர் நாடு கடத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அமெரிக்காவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தனது பணி விசா இன்னும் 12 மாதங்களுக்கும் மேலாக செல்லுபடியாகும் என்றும், அந்த விசாவைப் பெற்றதிலிருந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சுமார் 20 முறை அமெரிக்காவை விட்டு வெளியேறி மீண்டும் நுழைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
அவர் அமெரிக்க எல்லை காவல் படையினரால் விமான நிலையத்தில் 30 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். பின்னர் அவரது விசா செல்லாது என்று கூறி ஆஸ்திரேலியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு செல்லுபடியாகும் விசா இருப்பது “அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு உத்தரவாதம் அளிக்காது” என்று ஆஸ்திரேலியாவின் Smartraveller வலைத்தளம் கூறுகிறது.
“அமெரிக்க சட்டத்தின் கீழ், நீங்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தகுதியுடையவரா என்பதைத் தீர்மானிக்க அதிகாரிகளுக்கு பரந்த அதிகாரங்கள் உள்ளன. மேலும் எந்த காரணத்திற்காகவும் நீங்கள் அனுமதிக்கப்பட முடியாதவர் என்று முடிவு செய்யலாம்” என்று அது மேலும் கூறியது.