சீனாவில் ஹியாஜியோங் கிராண்ட் கேன்யன் பாலம் வருகிற ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இது ஒரு பெரிய பள்ளத்தாக்கின் குறுக்கே இரண்டு மைல்கள் நீளமுள்ள கட்டமைப்பாகும்.
216 மில்லியன் பவுண்டுகள் செலவில் இந்த பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தால் பெரிய பள்ளத்தாக்கை கடக்கும் பயண நேரம் ஒரு மணி நேரத்திலிருந்து ஒரு நிமிடமாகக் குறையும்.
ஈபிள் கோபுரத்தை விட 200 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட இந்தப் பாலம் ஒரு குறிப்பிடத்தக்க கட்டிடகலை சாதனையாகும்.
பாலத்தின் எஃகு டிரஸ்கள் சுமார் 22,000 மெட்ரிக் டொன் எடை கொண்டவை. மூன்று ஈபிள் கோபுரங்களுக்குச் சமமான எடை கொண்ட இந்த எஃகு டிரஸ்கள் இரண்டே மாதங்களில் நிறுவப்பட்டன.
சீனாவின் கிராமப்புறப் பகுதியில் முக்கியமான போக்குவரத்து இணைப்புகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்தப் புதிய பாலம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் இருக்கும்.
2016 ஆம் ஆண்டில், சீனாவின் மிக உயரமான பாலம் பெய்பன்ஜியாங்கில் கட்டப்பட்டது, இது வியக்கத்தக்க வகையில் 1,854 அடி உயரத்தில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.