புனித போப் பிரான்சிஸ், பாரம்பரிய போப்பாண்டவர் உடைகள் இல்லாமல், சாதாரண உடைகளில் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு வந்துள்ளார்.
இரட்டை நிமோனியாவிலிருந்து மீண்டு வரும் போப்பின் வருகை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித போப் பிரான்சிஸ் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதன்படி, போப்பிற்கு மருந்துகளுடன் சுமார் 2 மாதங்கள் ஓய்வு காலம் பரிந்துரைக்கப்பட்டதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையில், கத்தோலிக்க திருச்சபைக்கான மூன்று ஆண்டு சீர்திருத்த செயல்முறைக்கு போப் பிரான்சிஸ் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளார்.
அவர் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருந்த போதிலும், எதிர்காலத்தில் அவர் தனது பதவியில் நீடிக்க விரும்புவதற்கான வலுவான சமிக்ஞையாக இது இருந்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.