Newsஇந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை!

இந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை!

-

உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கப்படும்.

ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்தால் மரண தண்டனை விதிக்குமளவுக்கு சட்டத்தில் இடம் உண்டு.

அதே போல், அமெரிக்கா மாகாணம் ஒன்று இந்து மதம் குறித்து அவதூறாக பேசுவதை குற்றமாக அங்கீகரிக்கும் வகையிலான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 2.5 மில்லியன் இந்துக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 0.9% ஆகும். இதில் ஜோர்ஜியாவில் மட்டும் 40,000 க்கும் அதிகமான ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் முதல் மாகாணமாக ஜோர்ஜியாவில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதா, இனம், நிறம், மதம் அல்லது தேசிய வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டங்களின் கீழ் இந்து வெறுப்பைச் சேர்க்க முயல்கிறது.

இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்பட்டால், வெறுப்பு குற்றங்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிரான தற்போதைய சட்டங்களை அமல்படுத்தும்போது மாநில மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் இந்து வெறுப்பைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும்.

ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு, ஜார்ஜியா இந்து வெறுப்பைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய போது தொடங்கப்பட்ட பணியின் நீட்டிப்பாகும்.

“கடந்த சில ஆண்டுகளில், நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு, குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதைக் கண்டோம்,” என்று மசோதாவை அறிமுகப்படுத்திய செனட் உறுப்பினர் ஷான் ஸ்டில் கூறியுள்ளார்.

ஜோர்ஜியா மாகாணம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த மசோதாவை, அமெரிக்க மற்றும் இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன.

Latest news

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

மெல்போர்னில் 7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய லாரி ஓட்டுநர் நிரபராதியா?

7 குழந்தைகளை பலத்த காயப்படுத்திய பள்ளிப் பேருந்து விபத்தில் லாரி ஓட்டுநரின் வழக்கறிஞர் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மே 2023 இல் மெல்பேர்ணின் மேற்கில் ஒரு பள்ளிப் பேருந்தும்...

Cannes சிவப்பு கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடை

கண்ணியம் கருதி கேன்ஸ் Cannes கம்பளத்தில் நிர்வாணமாக தோன்ற தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விழாவிற்கு ஒரு நாள் முன்புதான் நிர்வாணம் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது. "கண்ணியத்தின் காரணங்களுக்காக, சிவப்பு கம்பளத்தில்...