தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் நேற்று இரவு நடந்த கார் விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் மற்றும் பத்து பேர் காயமடைந்தனர்.
வடக்கு பிரிஸ்பேர்ணில் உள்ள Bald Hillsi-இல் உள்ள Gympie Arterial சாலையில் நேற்று இரவு 9.40 மணியளவில் மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்கள் மீது வேன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்த ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த பத்து பேரில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.