ஒரு நபரின் தொலைபேசியில் இளம் குழந்தைகளின் 130க்கும் மேற்பட்ட பாலியல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மத்திய போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் 57 வயதான அந்த நபருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியரான அந்த நபர் பெர்த்தில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு பகல்நேர பராமரிப்பு மையத்தில் குழந்தைகள் பாலியல் செயலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் ஒரு கற்பனைக் கதையும் அந்த நபரின் தொலைபேசியில் காணப்பட்டது.
அமெரிக்காவில் காணாமல் போன மற்றும் சுரண்டப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நபர் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகப் பொருட்களை அணுகியதற்கும் வைத்திருந்ததற்கும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஒவ்வொரு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கும் பின்னால் இருக்கும் குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் அதிர்ச்சியால் அவதிப்படும் என்று AFP புலனாய்வாளர் ஷோனா டேவிஸ் வலியுறுத்துகிறார் .