ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி CBD மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருந்த 12 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ் ஹெல்த் வெளியிட்ட அறிக்கையில், இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் கடந்த வாரம் இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நோய் உருவாக சுமார் 10 நாட்கள் ஆகும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.