ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் தனது போர்ட் மெல்பேர்ண் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர் தனது கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், விக்டோரியா காவல்துறை அதிகாரியைக் கொலை செய்வதாக மிரட்டியது உட்பட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் ஜூலை 4 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.