உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து மக்களையும் செல்லப்பிராணிகளையும் வேறு அறைக்கு அழைத்துச் சென்று, பாம்பை தனிமைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு, உங்கள் வீட்டு முற்றத்திலோ அல்லது திறந்தவெளியிலோ ஒரு பாம்பு இருந்தால், அதை அணுகுவதைத் தவிர்த்து, தங்கள் அமைப்பையோ அல்லது உள்ளூர் பாம்பு பிடிப்பவரையோ விரைவில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.
ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் சுமார் 3,000 பாம்புக்கடிகள் பதிவாகின்றன, சராசரியாக வருடத்திற்கு 2 பேர் இறக்கின்றனர்.
ஜனவரி 2000 முதல் டிசம்பர் 2016 வரை, பாம்பு கடியால் 35 பேர் இறந்ததாகவும், இதில் 20 சதவீதம் பாம்புகளை எடுத்துச் செல்லும்போது அல்லது கொல்ல முயற்சிக்கும்போது ஏற்பட்ட கடி என்றும் தெரியவந்துள்ளது.
முறையான பயிற்சி இல்லாமல் பொதுமக்கள் பாம்புகளை எடுத்துச் செல்லவோ அல்லது பிடிக்கவோ முயற்சிப்பது ஆபத்தானது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.